V.S.அச்சுதானந்தனுக்கு RSS-ன் அதிகாரப்பூர்வ ஏடு புகழாரம்

கேரள மாநிலத்தை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடப்பதாக சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்ட அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான 'ஆர்கனைசர்' புகழாரம் சூட்டியுள்ளது.

அச்சுதானந்தனின் அறிக்கை, கேரள மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலையின் உண்மையான நிலையாகும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவுஜீவிகளில் ஒருவரான சியாம் கோஸ்லே எழுதியுள்ளார்.

இந்த மாதம் 8 ஆம் தேதி வெளியான ஆர்கனைசரின் அட்டைப் படத்தில் அச்சுதானந்தனின் படம் வெளியிடப்பட்டிருந்தது.

பணத்தின் மூலமாகவும், காதலின் மூலமாகவும் முஸ்லிம் இளைஞர்கள் மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை மதம் மாற்றி இந்த லட்சியத்திற்காக பயன்படுத்துவதாக வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியதை வழிமொழிந்துள்ளார் கோஸ்லே.

காங்கிரஸும், முஸ்லிம் லீக்கும் அச்சுதானந்தனை விமர்சித்தபோதிலும், தனது நிலைப்பாட்டை சட்டசபையில் எடுத்துக்கூறிய அச்சுதானந்தனை ஆர்கனைசர் பாராட்டுகிறது.

சி.பி.எம்மில் அச்சுதானந்தனின் முக்கிய எதிரியான பிரணாய்ராஜ் விஜயனிடமிருந்து இவ்விஷயத்தில் அச்சுதானந்தனுக்கு கிடைத்த ஆதரவு, சி.பி.எம் இந்த அபாயத்தை கண்டறிந்துள்ளது என்பதன் அடையாளமாகும் என 'செய்தி விமர்சனம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

'தாலிபான் மாடல'’ நீதிமன்றங்கள் செயல்படுவதாக கூறும் வி.எஸ்ஸின் அறிக்கையை மிகுந்த முக்கியத்துவத்துடன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது ஆர்கனைசர்.

அச்சுதானந்தனை விமர்சித்த காங்கிரஸை ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வஏடு கடுமையாக விமர்சித்துள்ளது. இவ்விஷயத்தில் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு தடைப்போடவே காங்கிரஸின் நிலைப்பாடு உதவும் என கோஸ்லே தனது கருத்தைத் தெரிவிக்கிறார்.

இதே இதழில் வெளியாகியுள்ள கேரளாவைச் சார்ந்த கட்டுரையாளர் ஒருவர் தனது கட்டுரையில் வி.எஸ்.அச்சுதானந்தனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்த ‘லவ்ஜிஹாதை’ வி.எஸ்.அச்சுதானந்தன் அறிக்கையில் வெளியிட்டது இந்த கட்டுரையில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கேரளாவில் உருவாக்கப்பட்ட ‘மதசார்பற்றக் கொள்கையின் முகமுடி’யை கிழித்தெறிய வி.எஸ்.அச்சுதானந்தனின் அறிக்கையால் முடிந்தது என்பது ஆர்கணைசர் கட்டுரையாளரின் கண்டுபிடிப்பாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் 25 ஆயிரம் தற்கொலைப்படை ஸ்க்வாடுகள் தயார்நிலையில் வைத்து சிவில் போருக்கு தயாராகிவருவது உள்ளிட்ட ஏராளமான பொய்களும் வி.எஸ்.அச்சுதானந்தனை புகழ்த்தும் இரு கட்டுரைகளிலும் காணப்படுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Koothanallur Muslims

Related

RSS 2720977527396946343

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item