இஸ்ரேல்-லெபனான் இராணுவத்தினர் மோதல்- ஐந்து பேர் மரணம்

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மூன்று லெபனான் ராணுவத்தினரும், மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரியும், ஒரு லெபனான் பத்திரிகையாளரும் இம்மோதலில் கொல்லப்பட்டவர்களாவர்.

இரு புறத்திலும் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. அல் அக்பர் பத்திரிகையின் செய்தியாளர்தான் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

இஸ்ரேலிய ராணுவத்தினர் எல்லையை மீறியதைத் தொடர்ந்துதான் மோதல் நிகழ்ந்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலின் போது இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக தகவல்.

தெற்கு லெபனான் கிராமமான அதீஸியாவை நோக்கி இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் இத்தாக்குதலுக்கு காரணம் லெபனான் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல் தொடர்ந்தால் கடுமையான பதிலடியை சந்திக்க வேண்டிவரும் என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மிரட்டியுள்ளது.

லெப்னானுக்கெதிராக புகார் அளிக்க ஐ.நாவில் தங்களின் பிரதிநிதியிடம் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் எல்லையை மீறியது ஐ.நாவின் 1701-ஆம் தீர்மானத்திற்கெதிரானதாகும் என லெப்னான் அதிபர் மைக்கேல் சுலைமான் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடந்த லெப்னான்-இஸ்ரேலுக்கிடையே நடந்த போருக்கு பிறகு உருவாக்கியதுதான் இத்தீர்மானம். லெபனானின் இறையாண்மையை மீறிய இஸ்ரேலின் நடவடிக்கையை பிரதமர் ஸஅத் ஹரீரி கண்டனம் தெரிவித்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குகொண்டுவர சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

இரு நாட்டவரும் பொறுமைக் காக்க எல்லையில் உள்ள ஐ.நா சமாதானப்படையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

Palestine 3021065509055879452

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item