கர்நாடகாவில் சங்க்பரிவார் நடத்தும் கல்வி நிலையங்களில் மதமாற்றம்: உண்மைக் கண்டறியும் குழு விசாரணை

உயர்தரமான கல்வியை அளிப்பதாக ஆசையூட்டி கர்நாடகாவில் சில சங்க்பரிவார் கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளை மதமாற்றுவதாக தகவல் வெளியானது.

இதர மாநிலங்களிலிருந்து இந்த கல்வி நிலையங்களில் பயில வரும் கிறிஸ்தவ மாணவிகள் இவ்வாறு மதமாற்றப்படுகின்றனர்.

குற்றச்சாட்டு வலுவானதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களிலிலுள்ள உண்மையைக் கண்டறிய புலனாய்வுக் குழுவினர் கர்நாடகாவில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்களிலும், மடங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இக்குழுவில் மூத்த அரசு அதிகாரிகளும்,அரசு சாரா அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர், மைசூர், மங்கலாபுரம், ஷிமோகா, தும்கூர், வடக்கு கன்னட மாவட்டங்களில் இக்குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணை தங்குமிட வசதிக்கொண்ட பள்ளிக்கூடங்களில் குறிப்பாக நடப்பதாக டெக்கான் க்ரோனிக்கிள் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கனவே இதுத்தொடர்பாக மணிப்பூர் அமைச்சர் நேரடியாக அரசிடமிருந்து விபரங்களை சேகரித்திருந்தார்.

உயர்தர கல்வியை அளிப்பதாக ஆசையூட்டித்தான் இதர மாநிலங்களிலுள்ள மாணவ-மாணவிகளை மடங்களில் சேர்க்கின்றனர்.பின்னர் தந்திரமான முறையில் அவர்களை ஹிந்து மதத்திற்கு மாற்றுகின்றனர்.

துவக்கத்தில் ஹிந்து மத சடங்குகளிலும்,பிரார்த்தனைகளிலும் அவர்களை பங்கெடுக்க செய்கின்றனர். இதுதான் இக்கல்வி நிலையங்களில் முக்கிய பாடம்.

கிறிஸ்தவ மிஷனரிகள் உணவும்,பணமும் அளித்து ஹிந்துக்களை மதம் மாற்றுவதாக குற்றஞ்சாட்டும் ஹிந்துத்துவா அமைப்புகள் தற்பொழுது அதேக்குற்றச்சாட்டை சந்தித்து வருகின்றனர் என டெக்கான் க்ரோனிக்கிள் கூறுகிறது.

ஒன்றும் அறியாத சிறுவர் சிறுமிகளைத்தான் இவர்கள் மதம் மாற்றுகின்றனர். இத்தகையதொரு மதமாற்றங்கள் கர்நாடகாவில் ஏற்கனவே நடந்து வருகிறது என்றாலும்,பா.ஜ.க அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் இது தீவிரமடைந்துள்ளது. பா.ஜ.க அரசின் ஆதரவோடுதான் இந்த கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.

மாணவர்கள் பலரையும், வலுக்கட்டாயமாக கர்நாடகாவுக்கு கொண்டு வந்ததாக மேகாலயா மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்புகள் புகார் அளித்ததாக கர்நாடகாவில் குழந்தை-பெண்கள் நலத்துறையின் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி டெக்கான் க்ரோனிகிள் கூறுகிறது.

ஜுவனைல் ஜஸ்டிச் ஆக்டின் படி கர்நாடகாவில் ஹிந்து கல்வி நிலையங்கள் மற்றும் அதனை நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கெதிராக க்ரிமினல் வழக்குப் பதிவுச்செய்ய மேகாலயா மாநிலத்தில் செயல்படும் கிறிஸ்தவ அமைப்புகள் அரசை வலியுறுத்திவருவதாக அப்பத்திரிகைக் கூறுகிறது.

இதற்கிடையே, கல்விநிலையங்கள் என்ற போர்வையில் நடக்கும் மதமாற்றத்தை சிறுவர்களின் உரிமைப் பாதுகாப்பிற்கான மாநில கமிஷன் தேசிய கமிஷனுக்கு விரிவான அறிக்கையை வழங்கியுள்ளது.

மாநில போர்டிங் பள்ளிக்கூடங்களிலும், மடங்களிலும் நடக்கும் சிறுவர்களின் உரிமை மீறல்களைக் குறித்து கிடைத்த புகார்களின் அடிப்படையில்தான் தேசிய கமிஷன் கோரியதைத் தொடர்ந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளில் பெரும்பாலனவற்றை ஒப்புக்கொள்கிறது இவ்வறிக்கை என டெக்கான் க்ரோனிக்கிள் கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது

Related

RSS 8106189918764912345

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item