கஷ்மீருக்கு சுயாட்சி- பிரதமர் பேச்சுக்சுக்கு பாஜக, சிவசேனா எதிர்ப்பு

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அதிகாரம் தரத் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.

இதுகுறித்து இன்று ராஜ்யசபாவில் பாஜக பிரச்சினை எழுப்பியது. கஷ்மீருக்கு சுயாட்சி என்ற சிந்தனையே காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்டது என்றும் பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சுயாட்சி என்ற பெயரில் கஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்க முயலுகிறது காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த சுயாட்சியை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இந்தியாவிலிருந்து கஷ்மீர் தனியாக செயல்படுவதை ஏற்க முடியாது. சுயாட்சி என்பது சரியானதுதானா என்பதை பிரதமர் யோசிக்க வேண்டும்.

சுயாட்சி என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் பிரசாத்.

இதனிடையே காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கும் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், ஜம்மு கஷ்மீர் மாநில சிவசேனா கட்சித் தலைவர் அசோக் குப்தா தலைமையில், அக்கட்சித் தொண்டர்கள் 300 பேர், ஜம்முவின் மார்க்கெட் பகுதிகள் மற்றும் ராணி பூங்காவில் கூடிய அவர்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொடும்பாவியை எரித்தனர்.

Related

RSS 5063987603775613440

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item