கிறிஸ்தவ சமுதாயம் சந்திக்கும் தாக்குதல்கள்


மனித உரிமை, குடியுரிமை ஆர்வலர்களின் முயற்சியால் நடைபெற்றதுதான் இந்த மக்கள் தீர்ப்பாயம் நிகழ்ச்சி.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிறிஸ்தவர்களுக்கெதிராக ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சங்க்பரிவார அமைப்புகள் கலவரத் தாண்டவமாடின.
கிறிஸ்தவ பாதிரிகளும்,கன்னியாஸ்திரிகளும் ஆதிவாசிகளின் ஏழ்மையை காரணமாக வைத்து மதமாற்றத்திற்கு தூண்டுவதாக பிரச்சாரம் செய்துதான் சங்க்பரிவார் அமைப்புகள் கலவரத்தை துவக்கின.
சங்க்பரிவாரின் மேற்பார்வையில் நடைபெறும் சிறுபான்மை விரோத கலவரங்களில் நிகழ்வதுபோலவே இங்கும் ஆட்சியாளர்கள் பார்வையாளர்களாக மாறினர்.
வன்முறையாளர்கள் 5600 வீடுகளை கொள்ளையடித்து தீக்கிரையாக்கினர். 54000 பேர் வீடுகளை இழந்தனர். பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்களும், பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டன.
ஏதேனும் முன்விரோதத்தை முன்வைத்து எதேச்சையாக பரவியது அல்ல ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரம். 1998-99 ஆண்டுகளில் மஹாராஷ்ட்ராவில் கிறிஸ்தவர்களுக்கெதிராக தொடர் தாக்குதல்கள் அரங்கேறின.
1998 செப்டம்பர் 23-ஆம் தேதி மத்தியப்பிரதேஷில் ஜாபூவா மாவட்டத்தில் 4 கன்னியாஸ்திரிகள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலும், ஏப்ரலில் ஆந்திரபிரதேச மாநிலத்தின் கர்ணூர் மாவட்டத்திலும்,ஜூலையில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சங்க்பரிவாரம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.
1999 ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஆஸ்திரேலியாவைச் சார்ந்த மிஷனரியான கிரஹாம் ஸ்டியூவார்ட் ஸ்டெயின்ஸ் என்பவரையும் அவருடைய இரண்டு பிள்ளைகளையும் காருக்குள் அடைத்து உயிரோடு தீவைத்துக் கொளுத்தினர்.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒளவண்ணா என்ற பகுதியில் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டனர். சுவிஷேகர்கள் மற்றும் செமினரி மாணவர்களுக்கெதிராக தாக்குதல்களும் கேரளாவில் நடைபெற்றது.
சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் திட்டங்களை எதிர்கொள்வதில் அரசுகள் தோல்வியையே சந்தித்து வருகின்றன.
பாதிப்பிற்குள்ளாக்கப்படும் சிறுபான்மை சமூகம் பிரச்சனையின் அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படாததும் இக்கலவரங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகா மாநிலத்திலும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்களை ஹிந்துத்துவா சக்திகள் கட்டவிழ்த்து விடும்பொழுது கேரளாவிலுள்ள கிறிஸ்தவ சபைகளும், மத பண்டிதர்களும் மவுனம் சாதித்தனர். சமூகங்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை தகர்க்கும் விதமாக பாடப் புத்தகங்களில் பிற மதத்தையும், தலைவரையும் அவமதிக்கும் பொய்களை வெளியிடுவதில்தான் அவர்களின் கவனமெல்லாம்.
கிறிஸ்தவத்தை எந்தக் காரணத்தினாலோ தழுவிய அப்பாவி ஆதிவாசிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடும் சங்க்பரிவார்களுக்கெதிராக கிறிஸ்தவ சபைகளும், அமைப்புகளும் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதும் கேள்விக்குறியாகும்.
நேசனல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனல் போன்ற மனித உரிமை அமைப்புகள்தான் இச்சூழலில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
விமர்சகன்
பாலைவனதூது
please click and read the link below
ReplyDeleteமதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம்.
---------