ஈரானின் புதிய ஆளில்லா விமானம் அறிமுகம்

ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிரிகளுக்கு மரணத்தின் தூதர்தான் இது என அறிமுக விழாவில் உரை நிகழ்த்தினார் நிஜாத்.

பாதுகாப்புத்துறையின் தேசிய தினத்தில்தான் கர்ரார்(முன் சென்று தாக்குவது) என்ற பெயரிடப்பட்ட நான்கு மீட்டர் நீளமுடைய இந்த குண்டுவீச்சு விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இயலக்கூடிய இவ்விமானம் 250 பவுண்ட் எடையுள்ள இரண்டு குண்டுகளை தாங்கும் சக்திக் கொண்டது.

ராணுவத்தை பாராட்டிய நிஜாத், எதிரிகளுக்கு ஈரானை தாக்குவதற்கான ஆர்வம் முடியும் வரை இது தொடரும் என அறிவித்தார்.

ஈரான் தங்களின் முதல் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை துவக்கிய மறுநாள்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கியாம்-1 கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் சோதித்தது. 1980 களின் இறுதியிலேயே பைலட் இல்லாத கண்காணிப்பு விமானங்களை ஈரான் தயாரித்திருந்தது.

1992 ஆம் ஆண்டு முதல் சுயமாக டாங்குகளும், கவச வாகனங்களும், ஏவுகணைகளும், டார்பிடோக்களும் ஈரான் தயாரித்திருந்தது.

Koothanallur Muslims
பாலைவனதூது

Related

MUSLIMS 6146849780952868871

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item