அரப் லீக் இஸ்ரேலுக்கு குடை பிடிக்கிறது - ஹமாஸ்

இஸ்ரேலுடனான நேரடியான பேச்சுவார்த்தைக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் இஸ்ரேல் நடத்திவரும் அட்டூழியங்களுக்கு அரப் லீக் குடை பிடிக்கிறது என ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஃபலஸ்தீன் மக்களுக்கெதிராக அரப் லீக் செய்த அரசியல் பாவத்திற்கான தண்டனையை சுமப்பது காஸ்ஸா மக்கள் என ஹமாஸின் செய்தித்தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹூமை மேற்கோள்காட்டி மஆன் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த வியாழக்கிழமை அரப் லீக் கமிட்டியும்,மஹ்மூத் அப்பாஸுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுடனான நேரடி பேச்சுவார்த்தை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.

"எங்கள் மக்களை தாக்குவதற்கும், குடியேற்றங்களை தொடர்வதற்கு திரையாக செயல்படுகிறது அரப் லீக். ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஃபாலோ அப் கமிட்டியும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளன. நேரடியான பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவதற்கான தீர்மானம் ஃபலஸ்தீனர்களின் விருப்பத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்திய கொடூரத்தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்திவைத்த பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முடிவை வாபஸ்பெற வேண்டும் என பர்ஹூம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தன் மூலம் அப்பாஸ் ஃபலஸ்தீன் மக்களை நிராசையில் ஆழ்த்தியுள்ளார். ஃபலஸ்தீனின் உரிமைகளை வென்றெடுக்க அமெரிக்காவை நாடுவது காலத்தை விரயமாக்கும் செயல்" என பர்ஹூம் கருத்து தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

Palestine 7731467559482799683

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item