கூத்தாநல்லூர் TNTJ நடத்திய வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/05/tntj.html
கூத்தாநல்லூர் TNTJ சார்பாக வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நேற்று நடத்தப்பட்டது. பல தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி இக்கூட்டம் நேற்று ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர்-ல் நடத்த பல தடைகள் வந்த காரணத்தினால், கூத்தாநல்லூர்-ன் வெளிப்புற பகுதியில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் சகோதரர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தஞ்சை, திருவாரூர். நாகை, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
பெண்களின் கூட்டம் அலைமோதின, சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர் என்பது வரவேற்க்கத்தக்கது.
உலகம் முழுவதும் உள்ள கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை 150-க்கும் மேற்பட்டோர் நேரடி ஒளிபரப்பில் கண்டனர்.
மேலும் சகோதரர் PJ அவர்கள் வரதட்சணை ஒழிப்பை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், கூத்தாநல்லூர்-ன் மக்களையும் பாரம்பரியத்தையும் இழிவாக பேசியது, கண்ணியக்குறைவாக பேசியதும் கூட்டத்தில் வந்தவர்களின் முகம் சுளிக்கும் படி ஆகிவிட்டது. அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் ஆலிம் என்ற எண்ணத்தில் கண்ணியமான முறையில் பதிவு செய்திருக்கலாம் என்று சில நடுநிலையாளர்கள் கூட கருதுகின்றனர். இக்கூட்டத்தில் பிற அமைப்புகளை குறை கூறுவதையும் தவிர்த்து வரதட்சனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால் வந்திருக்க கூடிய மக்களுக்கு கொஞ்சமாவது பயனாக இருந்திருக்கும் என்றும் வரதட்சணை ஒழிப்பு மாநாடு என்று நீண்ட தொலைவில் இருந்து வந்த மக்களுக்கு இந்த மாநாடு ஒரு ஏமாற்றமாக இருந்ததாக கூத்தாநல்லூர் சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள கூடாது என்று கூத்தாநல்லூர் ஜமாத்தினர் அறிக்கை வெளியுட்டுள்ள காரணத்தினால் அதிகாமான கூத்தாநல்லூர் மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. இக்கூட்டத்தின் நடுவே சில ஆலிம்கள் கூட்டத்தை நிறுத்தும் படியும் காவல் துறையிடம் முறையிட்டதாகவும், இக்கூட்டத்தை நிறுத்த முடியாது, வேண்டும் என்றால் அவர்கள் மீது வழக்கு தொடுங்கள் என்று கூறி காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிகின்றனர்.
இக்கூட்டம் சரியாக 11 மணியளவில் நிறைவடைந்தது. இறுதியாக கோடை கால பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க பட்டது.