கோவிலில் பசு மாமிசம்: நான்கு ஹிந்துவாஹினி பயங்கரவாதிகள் கைது!

ஹைதராபாத்தில் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க குர்மாகுடவில் உள்ள ஹனுமான் கோவிலில் பசு மாமிசத்தை வீசிய வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஹிந்துவாஹினியின் நான்கு உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது. நாகராஜ், ரமேஷ், தயானந்த் சிங், கிரண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக கருதப்படும் நிரஞ்சன், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

நகரத்தில் முஸ்லிம்-ஹிந்து கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இவர்கள் ஹனுமான் கோவிலில் பாதி தீயில் கரிக்கப்பட்ட மாமிசத்தை  வைத்ததாக போலீஸ் கூறுகிறது. கணேஷ சதுர்த்தி, தசரா ஆகிய திருவிழாக்களில் இக்குற்றவாளிகள் தீவிரமாக பங்கேற்பவர்கள் என்று போலீஸ் தெரிவிக்கிறது.

ஸ்ரீனிவாஸின் மதுபானக் கடையில் வைத்து இச்சம்பவத்திற்கான திட்டம் தீட்டப்பட்டதாக கூடுதல் டி.சி.பி பி.ஜே.விக்டர் கூறுகிறார்.

கால்நடைகளின் உடல்களை தீயில் எரிக்கப்படும் இடத்தை துப்புரவு தொழிலாளியான நாகராஜுக்கு தெரியும். அங்கிருந்து பாதி கரிந்த நிலையிலான இரண்டு பசுமாட்டின் கால்கள் எடுத்து வரப்பட்டன. அத்துடன் பச்சை நிற மையும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் ஏழாம் தேதி நள்ளிரவில் கோவிலில் பசுமாட்டின் பாதி எரிக்கப்பட்ட கால்களை போடப்பட்டன. பின்னர் சுவரில் பச்சை நிற மையால் எழுதப்பட்டது. அடுத்த நாள் காலை முஸ்லிம்கள் கோவிலில் பசு மாமிசத்தை வீசியுள்ளார்கள் என்று பரப்புரைச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் பசு மாமிசத்தை கோவிலில் வீசிய ஹிந்துவாஹினி கும்பலைச் சார்ந்தவர்கள்தாம் என போலீஸ் கூறுகிறது.

பசு மாமிசத்தை கோவிலில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறைச் சம்பவங்களில் ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் கடைகளும், வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

நவமி, கணேஷ சதுர்த்தி ஆகிய திருவிழாக்களின் போதும் கலவரத்தை உருவாக்க ஹிந்துத்துவா விஷமிகள் திட்டமிட்டுள்ளனர். ஹிந்து வாஹினி தீவிரவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Related

சமுதாயம் 7461338557701786817

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item