எகிப்தில் புரட்சிக்குப் பின் இன்று அதிபர் தேர்தல்

எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை புரட்சியின் மூலம் வீழ்த்தப்பட்ட பிறகு இன்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

எகிப்தில் 32 ஆண்டுகாலம் ஹொஸ்னி முபாரக் ஆட்சி நடத்தினார். அவரது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனநாயக வழியில் பொதுமக்கள் போராடினர். கடந்த பிப்ரவரி மாதம் முபாரக்கின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ராணுவம் சார்பில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸி, முன்னாள் இஃவான் உறுப்பினர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ், அரப் லீக் முன்னாள் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா, முபாரக் ஆட்சியின் இறுதி பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

அவர்களில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திர நீதி கட்சியை டாக்டர் முஹம்மது முர்ஸி மற்றும் முன்னாள் இஃவான் உறுப்பினர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ்க்குக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் வாக்கு சாவடிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நாளை வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்த வாக்காளர்கள் 5 கோடி பேர்.

எகிப்தில் ஜனநாயக வழியில் 60 ஆண்டுகளுக்கு முன்புதான் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் மக்கள் வாக்களிப்பின் மூலமதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 32 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த முபாரக்கோ ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்.
எகிப்தில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவை சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்ற்ன.

Related

சமுதாயம் 6734898688807893760

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item