முஸ்லிம் வாக்குவங்கியை ஒழிக்கவேண்டும்! – தொகாடியா

இந்தியாவில் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்து ஹிந்து வாக்கு வங்கிகளை உருவாக்கவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிந்து பாதுகாப்பு சமிதியின் ஏற்பாட்டில் கேரள மாநிலம் காஸர்கோட்டில் நடந்த ஹிந்து சக்தி சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகாடியா உரை நிகழ்த்தினார்.

தொகாடியா தனது உரையில் கூறியது: ‘ஹிந்துக்கள் உள்ளிட்டோர் அளிக்கும் வரிப்பணத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு சலுகைகளை அரசு வழங்குகிறது. முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் அவர்கள் முன்னர் மண்டியிடுகின்றனர். ஹிந்துக்களை இகழும் வகையில் முஸ்லிம்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குவதால் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்துக்கட்ட வேண்டும்.

கேரளத்தில் ஜிஹாத் நெட்வர்க் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜிஹாதிற்கு பதிலடி கொடுக்கவேண்டும்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ், முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் 30 ஆயிரம் ரூபாய் அளிக்கிறார். ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சொந்த நாட்டில் அனுபவிக்கும் பாரபட்சத்தை எதிர்கொள்ளமுடியும்.’ இவ்வாறு தொகாடியா கூறினார்.

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த கலவரத்திற்கு தூபம் போட்டது தொகாடியாவின் வெறிப்பேச்சு என்று கூறப்படுகிறது. ஹிந்து பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்துவரும் தொகாடியா போன்றவர்களுக்கு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Related

சமுதாயம் 6301497896609483756

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item