கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!
http://koothanallurmuslims.blogspot.com/2012/05/blog-post_23.html
உலக
நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப்
பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது.
மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ்
வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு
உணர்த்துகிறது.
தோஹா நகரின் தாரிக் இப்னு ஸியாத் இண்டிபெண்டண்ட் ஸ்கூலில் அரங்கு நிறைந்து காணப்பட்ட அவையில் கத்தரின் கலை-கலாச்சார துறை அமைச்சரின் ஆலோசகர் பேராசிரியர் மூஸா ஸைனல் கத்தர் தேஜஸ் பதிப்பின் வெளியீட்டை துவக்கி வைத்தார்.
கத்தர்-இந்தியா இடையேயான ஆழமான வரலாற்று
மற்றும் கலாச்சார உறவை வலுப்படுத்தும் அடிக்கல்லாக மாற தேஜஸிற்கு
சாத்தியமாகட்டும் என அவர் தனது உரையில் வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடக வல்லுநர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.