சமூகத்தை சக்திபடுத்த கைகோர்ப்போம்! பாப்புலர் ஃப்ரண்ட்

இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை மக்களுக்கு விளக்கி சமூகத்தை வலிமைப்படுத்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கல்வி, பொருளாதாரம், அரசியல், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலிருந்தும் ஓரங்கப்பட்டு அன்றாட வாழ்விற்காக பல முஸ்லிம்கள் அல்லல்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக வட இந்தியாவை உற்று நோக்கும் போது முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. பின்னடைவாக இருந்த ஒவ்வொரு சமூகமும் எழுச்சி பெற்று இந்த அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்தியதன் மூலமாக இன்று அவர்கள் முன்னேறிய சமூகமாக மாறிவருகின்றனர். ஆனால் தேசத்தின் சுதந்திரத்திற்காக தனது சதவிகிதத்தையும் விட அதிக அளவில் போராடிய முஸ்லிம் சமூகத்தை இன்று வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் பொருட்படுத்துவதாக இல்லை. அதே சமயம் முஸ்லிம் சமூகத்தின் நிலை அறிந்து கொள்வதற்காக அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் கமிஷன்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

மறுபுரம் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களே இதற்கு சாட்சியாக இருக்கின்றது.

இந்நிலையில் முஸ்லிம் சமூகம் இது தொடர்பான் விழிப்புண்ர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும், சமூகத்தை வலிமைப்படுத்த நான் ஒன்றினைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

இது தொடர்பாக கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின்  மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், மாநில பேச்சாளர் இமாம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் முஹைதீன், எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, கோவை மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது உட்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். பெரும் திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.






Related

சமுதாயம் 1470089994020939497

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item