எங்களை பற்றி
அன்பார்ந்த கூத்தாநல்லூர் முஸ்லிம்களின் வாசகர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !
www.koothanallurmuslims.com என்ற இணையதளம்,
நம் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்க பட்டது. இந்த இணையதளத்தின் நோக்கம் பிறரை குறை கூறவோ, பிறர் செய்யும் தவறை சுட்டிக்காட்டவோ அல்ல.
நம்மை சுற்றி நடக்க கூடிய சமுதாய செய்திகள், நம் சமுதாய மக்களுக்கு இழைக்கப்பட கூடிய அநீதிகள், நம் சமுதாயம் அடைந்த வெற்றிகள், நம் சமுதாய இயக்கத்தின் செய்திகள் அனைத்தும் இங்கே பதியப்படும், இதன் மூலம் நம் சமுதாய மக்கள் விழிப்புணர்வு அடையலாம். இன்ஷா அல்லாஹ்.
இந்த இணையதளத்தை பற்றி உங்களுக்கு குறை இருந்தால் எங்களுடைய இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டு உங்கள் குறையை தெரிவிக்கலாம்.
வாசகர்களுடைய கருத்துகள் வரவேற்கபடுகிறது. வாசகர்கள் தாங்கள் கருத்தை அழகிய முறையில் பதிய வேண்டும் என அன்புடன் கேட்டுகொள்கிறோம். உங்கள் கருத்து பிறர் மனதை புண் படுத்தாமலும், பிறரை குறை கூறாமலும் இருக்கவேண்டும்.
CHAT BOX -ல் உங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம், இந்த CHAT BOX அரட்டை அடிபதற்கு அல்ல, சமுதாய செய்திகளை கலந்துரையாடுவதற்கு மட்டுமே. இதில் பிறரை பற்றி குறை சொல்லாமல், தங்களுடைய அழகான கருத்தையும், விமர்சனத்தையும் பதியுங்கள்.
வாசகர்களின் படைப்புகள் :
வாசகர்கள் தங்களுடைய படைப்புகளை எங்களுக்கு இ-மெயில் அனுப்பலாம், இன்ஷா அல்லாஹ், வாசகர்களின் பெயரோடு அதை நம் இணையத்தளத்தில் பதிப்போம்.
குறிப்பு :
* ஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும்.
* தமிழில் தகவல்கள் அனுப்பும் போது Google Transliterate பயன்படுத்துங்கள்.
* எந்தவொரு தனி நபரையும், சமுதாய இயக்கங்களையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது.
* பொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக் கூடாது.
* உங்கள் படைப்பை நாங்கள் படித்த பின்பு, தேவையான தகவலாக இருந்தால் மட்டுமே அதை நம் இணையதளத்தில் படிப்போம்.
உங்களது படைப்புகளை அனுப்ப :
எங்களை தொடர்பு கொள்ள :
இ-மெயில் : contact@koothanallurmuslims.com