பெண்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற எஸ்.டி.பி.ஐ வாழ்த்து!

பெண்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற

 எஸ்.டி.பி.ஐ வாழ்த்து! 





இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா... என்றான் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மனித உயிரின் கருவறையாய், அன்னையாய், மனைவியாய் திகழ்ந்துகொண்டிருக்கும் அந்த போற்றுதலுக்குரிய பெண்களின் உரிமைகளுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக உலக மகளிர் தினம் மார்ச் 08 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த போற்றுதலுக்குரிய பெண்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெறவும், தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறவும் எஸ்.டிபி.ஐ கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த வெற்றிக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி என்றும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் குறிப்பாக நமது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்றைகள், பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லி மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக்கு பின்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் களநிலை இன்னும் மாறவில்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையை மாற்றி பெண்களுக்கு உரிய
பாதுகாப்பை, அவர்களுக்குரிய உரிமையை நிலைநாட்டிட அனைவரும் மகளிர் தின நாளில் சூளுரைப்போம் என கேட்டுக்கொள்வதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்ணடிமைத்தனம், கொத்தடிமை முறைக்கு எதிராகவும், சமூக சீர்கேடுகள், கலாச்சார சீர்கேடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை களைய பெண்கள் தங்களை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்தி போராடவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்காக எஸ்.டி.பி.ஐ கட்சி என்றும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொண்டு,மீண்டும் ஒருமுறை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related

முக்கியமானவை 7971951909316102036

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item