"அனைத்து நாட்களிலும் பெண்களை கண்ணியப்படுத்துவோம்"
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_32.html
"அனைத்து நாட்களிலும் பெண்களை கண்ணியப்படுத்துவோம்"
"அனைத்து நாட்களிலும் பெண்களை கண்ணியப்படுத்துவோம்" - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் அழைப்பு!
இந்திய சமூகத்தில் பெண்களை, அவர்களின் இயல்புக்கு இணங்க கண்ணியமாக மதிக்கும் போக்கு அருகி வருவதை உணர்த்திய சம்பவம் தான் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவமாகும்.
அந்தக் கொடூரம் நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் அச்சத்தில் உள்ளதைத்தான், அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளிட்ட கொடூரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு பக்கம் சக்தியின் வடிவாகவும், மறுபக்கம் தீட்டு காரணமாக கீழான பார்வையிலும் பெண்களை பார்க்கும் இந்திய சமூகத்தில், உலகமயம் எனும் பேரழிவு சித்தாந்தம் அவர்களை போகப் பொருளாக மாற்றி விட்டது.
பிபிசி தொலைக்காட்சி தயாரித்த நிர்பயா குறித்த "இந்தியாவின் மகள்" ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரின் வாக்குமூலம், பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் பார்வையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
வெறுமனே சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் மட்டுமோ, மகளிர் தினம் போன்ற நாட்களில் மட்டும் பெண் சமூகத்தின் அவலங்களை பேசுவது மட்டுமோ போதாது.
சமூகத்தில் பாதியாய் இருக்க கூடிய பெண்களை, சக மனிதராக பார்க்கும் மனநிலையை ஆண்களிடம் வளர்க்க வேண்டும்.
கல்வி திட்டத்திலேயே அத்தகையதொரு சீரிய வழிகாட்டுதலை இளைய தலைமுறைக்கு கற்று கொடுக்கவும், பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
குடும்பத்தில், பணியிடங்களில், பொது இடங்களில் என எல்லா நிலையிலும் பெண்களை கண்ணியமாக, கண்ணியமானவர்களாக பார்க்கும் பழக்கத்தை கைக் கொள்ள சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி ஏற்போம்.
மகளிர் தினத்தை அதன் தூய நோக்கில் கொண்டாடும் அனைத்து மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு
மு. முஹம்மது இஸ்மாயீல்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.