பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப் பேரணி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

திண்டுகல்லில் தடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப் பேரணி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் எனற முழக்கத்தை முன்வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாபெரும் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது.
காவல்துறை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் காவல்துறை முன்வைத்த பல பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பிப்ரவரி 17 அன்று தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து நீதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் நீதியரசர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 15 அன்று திண்டுகல்லில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி மீண்டும் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் கூறியபடி மனுவை உரிய முறையில் பரிசீலிக்காமல் ஆதாரமற்ற , நகைப்புக்குரிய காரணங்களை புனைந்து சங்பரிவார்களை திருப்திப்படுத்தும் நோக்கில் காவல்துறை மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் இன்று (15.03.2015) பேகம்பூரில் திட்டமிடப்பட்ட ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தடையை மீறி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சி மாநில பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநிலத்தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் , பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் A.காலித் முஹம்மது , பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர்கள் J.முஹம்மது ரசீன், A.முஹைதீன் அப்துல் காதர் , பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளர் S.இப்ராஹீம் பாதுஷா மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தலைவர் பீட்டர் ரமேஷ். மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related

முக்கியமானவை 8645264554549982930

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item