தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் - தமுமுக கண்டனம் !
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_72.html
புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது சங்கப் பரிவார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் !
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர், ஒளிபதிவாளர் மற்றும் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்த துணிந்துள்ள பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினரை வன்மையாக கண்டிக்கிறேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைச் சகிக்க முடியாத சங்பரிவார அமைப்பினர் புதிய தலைமுறை தொலைக்கட்சி. மீது வன்முறைத் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது சங்பரிவார அமைப்பினர் தாக்குதல் நடத்தி, ஊழியர்களைக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்று சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் மீதான தங்கள் மரியாதையை சங்க பரிவார் அமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர் . இந்த தாக்குதல் மூலம் ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்பதை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினர் மீண்டும் நிருபித்துள்ளனர்.
இந்த தாக்குதலை தடுக்க தவறிய காவல்துறையினரையும் கண்டிக்கிறேன்.
ஃபாசிச சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகும், எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் , ஊடகங்கள் தனிமனிதர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கும் நம் வலிமையான ஆதரவைத் தெரிவிப்போம்.
இத்தகைய பயங்கரவாதப் போக்கை அனைவரும் ஓரணியில் நின்று கண்டிப்போம்
இத்தகைய பயங்கரவாதப் போக்கை அனைவரும் ஓரணியில் நின்று கண்டிப்போம்
(ஒ-ம்) எம்.எச். ஜவாஹிருல்லா
ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!
ReplyDeleteபுதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)