மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும் தடை !
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_39.html
மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும் தடை
மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும் தடைவிதித்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குறியது. இது மனித உரிமைக்கும், விவசாயிகள் நலனுக்கும் எதிரானது.
மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உணவாக உட்கொண்டு வருகின்றனர். இது அதிக புரதச்சத்துள்ள உணவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டய தமிழர்களும் இந்தியர்களும் உணவாக மாட்டிறைச்சியை உண்டு வாழ்ந்தனர் என்பதற்கான ஏராளமான வரலாற்று ஆவணங்கள் உண்டு. இராமாயணம் போன்ற புராண நூல்களிலும் இதற்கு ஆதாரங்கள் உண்டு.
நமது நாட்டில் உடலுழைப்பை வழங்குகின்ற தொழிலாளர்களும், ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களும் குறைந்த விலையில் அதிக புரதச் சத்துடன் கிடைப்பதால் மாட்டிறைச்சியை விரும்பி உண்டு வருகின்றனர். ஏன் மதங்களையும், சாதிகளையும் கடந்து அனைத்து தரப்பு மக்களும் மாட்டிறைச்சியை உண்டு வருகின்றனர். இச்சட்டதால் அவர்கள் பாதிப்படைவர். விவசாயிகள், விவசாயத்திற்கு பயன்படுத்திய மாடுகளை இனி பயன்படுத்த முடியாது என்கிற நிலையில் அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர். கோவில்களுக்கு அற்பணிக்கும் சில நூறு பசுக்களையே அரசு அறநிலை துறைகளிலும், கோவில் நிலங்களிலும் பாதுகாக்க முடியாத நிலையில் லட்சக்கணக்கான பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
பயன்படுத்த முடியாத மாடுகளை விற்க முடியாது என்ற நிலை உருவானதும் வேறு தேவையான மாடுகளை வாங்க விவசாயிகள் சிரமப்படுவர், நஷ்டமடைவர். ஏற்கனவே தற்கொலை செய்து கொள்வதில் முன்னிலையில் இருக்கும் மராட்டிய மாநில விவசாயிகளின் எண்ணிக்கையை இது அதிகப்படுத்தும். மேலும், இறைச்சி தொழிலில் ஈடுபடும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பர். எனவே உடனடியாக மாட்டிறைச்சிக்கான தடை சட்டத்தை கைவிடுமாறு மகராஷ்ட்டிரா அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், இச்சட்டத்தை வைத்து தமிழகத்திலும் சிலர் கூச்சலிட துவங்கியுள்ளனர். இது விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவும் தான் அமையும். தமிழகத்தில் மாட்டிறைச்சி விற்பனை சுமூகமாக நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பனைக்கு விவசாயிகளால் கொண்டு செல்லப்படும் மாடுகளை தடுத்து துன்புறுத்தம் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபடும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்