திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_13.html
பத்திரிகை செய்தி !
அரசு துறைகளில் எல்லா மாவட்டங்களிலும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலை கட்டுபடுத்த லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவது மார்ச் 3 முதல் 12 வரை தொடர் மக்கள் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திவுள்ளது. அதன் இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சி திருவாரூர் மாவட்டம் சார்பாக இன்று (12.3.2015) காலை 11.00 மணிக்கு மாபெரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை செய்யும் போராட்டம் SDTU மாநில தலைவர் A.முஹம்மது பாருக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு
M.A.லத்திப், SDPI மாவட்ட தலைவர்,
M.நெய்னா முஹம்மது SDPI மாவட்ட பொது செயலாளர்,
S.அப்துல் அஜீஸ் SDPI மாவட்ட து.தலைவர்,
D.M.H.அப்துல் ராஜிக் PFI மாவட்ட செயலாளர்,
S.அப்துல் கரீம் SDTU மாவட்ட தலைவர்,
A.முஹம்மது பைசல் BABL, SDPI மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை செய்ய முயன்ற பொது காவல்துறையினரால் கைது செய்து பின் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்படிக்கு
பி.எம்.யூசுப்தீன்,
மாவட்ட செய்தி தொடர்பாளர்,
எஸ்.டி.பி.ஐ.கட்சி திருவாரூர்.
பி.எம்.யூசுப்தீன்,
மாவட்ட செய்தி தொடர்பாளர்,
எஸ்.டி.பி.ஐ.கட்சி திருவாரூர்.