இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் ஷார்ஜா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு !
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_7.html
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் ஷார்ஜா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு !
SDPI கட்சியின் அமீரக பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் ஷார்ஜா மண்டல புதிய நிர்வாகிகளை தேர்ந்தேடுக்க கலந்தாய்வு கூட்டம் ஷார்ஜா ரோலாவில் உள்ள அல் கஜல் ரெஸ்டாரண்ட்டில் நேற்று இரவு 7: 30 மணியளவில் நடைபெற்றது, கூட்டத்திற்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தேசிய பொதுசெயலாளர் சகோ முஹம்மது முனவர் அவர்கள் தலைமையேற்று தேர்தல் முறைகளையும் நிர்வாக அமைப்பையும் விவரித்தார். தேர்தல் அதிகாரியாக இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில பொது செயலாளர் வலசை ஃபைசல் அவர்கள் முன்னின்று தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இறுதியாக தலைமைத்துவ பன்பு மற்றும் செயல்வீரர்களின் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஷார்ஜா மண்டல புதிய நிர்வாக கமிட்டி
தலைவர்; ஆடிட்டர் ஹசன்
துனை தலைவர்; PM ஜாஹீர் ஹுசைன்
பொது செயலாளர்; அப்துல் ரஹ்மான்
செயலாளர்; பிரேம் நஸீர்
பொருளாளர்; முஜிபுர் ரஹ்மான்
செயற்குழு உறுப்பினர்கள்
ஷஃபீக்
இமாம் சிராஜிதீன்
முஹம்மது மைதீன்
குவாஜா