மகளிர் தினத்தில் பெண் பத்திரிகையாளரை தாக்கிய கொடூரம்!
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_59.html
மகளிர் தினத்தில் பெண் பத்திரிகையாளரை தாக்கிய கொடூரம்! - இந்துத்துவ அமைப்பினர் கொலை வெறி தாக்குதல்! தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை!!
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் தடுத்ததுடன், தொலைக்காட்சி அலுவலகத்தின் அருகிலேயே ஒளிப்பதிவாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வலியுறுத்துகிறோம்.
குறிப்பாக பெண் பத்திரிகையாளரை மகளிர் தினத்தன்று தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இப்படிக்கு
மு. முஹம்மது இஸ்மாயீல்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!
ReplyDeleteபுதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)