கூத்தாநல்லூர்-ல்
மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு நாளை நடக்க இருகின்றது. இதில்
த.மு.மு.க மற்றும் ம.ம.க-வின் மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள்
கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர்
இந்தியாவின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் முதல் மாவட்ட
மாநாடு மே 17 அன்று நடைபெற உள்ளது. ம.ம.க. மாவட்ட தலைவர் நூர்தீன்
தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும், மாணவர் இந்தியாவின் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சர்வத் கான் தலைமையில் மாணவர் படையும்
மாவட்டமெங்கும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
இந்த
மாநாட்டையொட்டி மதியம் 4 மணி முதல் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற
உள்ளது. இதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், கல்வி குறித்த மாணவர்கள் மற்றும்
பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். மற்றொரு அரங்கில்
இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் சட்ட
ஆலோசனை அரங்கம், மருத்துவ பரிசோதனை ஆய்வு அரங்கம், புத்தக கடைகளின்
கண்காட்சி ஆகியவற்றுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகளும்
அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி மதியம் 4 மணி முதல் mmklive.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் அணி, அணியாக திரண்டு வரும் வகையில்
பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பணிகள் குறித்து மமக பொதுச்
செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, மமக
மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன்
அவ்வப்போது கலந்தாலோசித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி
மாநிலமெங்கும் மாணவர் இந்தியாவை கட்டியமைக்கும் பணிகளில் ஒரு பகுதியாக
இம்மாணவர் மாநாடு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நிருபர்
கூத்தாநல்லூர்