இலங்கை மஸ்ஜிதை இடிக்க கோரி புத்தமத வெறியர்கள் போராட்டம்

இலங்கையின் தம்புள்ளை நகரில் உள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதை இடிக்க கோரி புத்தமத வெறியர்கள் நேற்று(திங்கள் கிழமை) போராட்டம் நடத்தினர். மஸ்ஜிதை இடிக்கவேண்டும்! புத்த மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இலங்கை தம்புள்ளை நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்துள்ள முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான மஸ்ஜிதை நகரின் இதர வழிப்பாட்டுத்தலங்களை அகற்றி தூய்மையாக்கப் போகிறோம் என கூறிக்கொண்டு வெறிப்பிடித்த புத்த பிக்குகள் மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இப்பிரச்சனை சர்வதேச அளவில் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலங்கை முஸ்லிம்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை பிரதமரோ புத்த பிக்குகளுக்கு ஆதரவாக பாரபட்சமான அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தெற்கு இருக்கும் களுத்துறை பகுதியில் புத்த பிக்குகள் மஸ்ஜிதை இடிக்க கோரி ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

முஸ்லிம்களின் நெருக்குதலுக்கு பணிந்துவிடக் கூடாது என்றும், புத்தமதத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அசோக மெனிக்கோடா என்ற புத்த பிக்கு வலியுறுத்தினார்.

Related

சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!

இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்ட...

வெங்காய ‘வியாபாரி’ அன்சாரி – ‘Q’ பிரிவு போலீஸாரால் ‘தீவிரவாதி(?)’ யாக கைது!

இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்...

தொடரும் முஸ்லிம் வேட்டை: தீவிரவாதத்தின் பெயரால் 11 இளைஞர்கள் கைது

அரசியல் தலைவர்கள் உள்பட பிரமுகர்களை கொலைச்செய்ய திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு. இதில் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item