லெபனானில் உயிர் தியாகிகளுக்கு தீம் பார்க்கை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் எல்லையோடு இணைந்த மிலீத்தாவில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் உயிர்தியாகிகளை நினைவுக்கூறும் தீம் பார்க்கை திறந்துள்ளது. 'பூமி சுவனத்தோடு பேசுகிறது' என்பது இரண்டுகோடி டாலர் செலவில் உருவாகியிருக்கும் தீம் பார்க்கிற்கு அழைப்புவிடுக்கும் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இஸ்லாமிய தற்காப்பு போருக்கு குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது பார்க்கின் நிர்மாணம்.ஹிஸ்புல்லாஹ்வின் செயல்பாடுகளைக் குறித்தும், இஸ்ரேலுக்கெதிரான தற்காப்புப் போரைக் குறித்தும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள் பார்க்கில் இடம்பிடித்துள்ளன.

'வழி' என்று பெயரிடப்பட்டுள்ள பகுதியின் வழியாக பயணிக்கும் பொழுது ஒரு போர்க்களத்திற்கு சென்ற அனுபவம் ஏற்படும். சுவரில் அழகான வர்ணங்களில் தீட்டப்பட்டுள்ள போர்க்களக் காட்சிகள். அத்துடன் போர்க்களத்தில் மருத்துவமனையும், ராக்கெட் லாஞ்சிங் மையமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடனான போரின் பொழுது ரகசிய பங்க்கராக செயல்பட்ட குகையை கடந்து சென்றால் ஏழாயிரம் போராளிகள் பயன்படுத்திய இடங்களின் விவரங்களைக் காணலாம்.

'கர்த்தம்' என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில் ஒரு தனியான குழி ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து கைப்பற்றிய இயந்திரத் துப்பாக்கிகளும், ராக்கெட்டுகளும், டேங்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நம்முடைய வீடுகளை தகர்க்க பயன்பட்டவை இவை. தற்பொழுது நமது காலடியில் வந்துள்ளது என வழிகாட்டியொருவர் பார்க்கை காணவரும் பார்வையாளர்களிடம் விளக்குகிறார்.

அங்கு காணப்படும் ஹெல்மெட்டுகளெல்லாம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினருடையது.

"இந்த சாதனைகளை காணும்பொழுது மகனை இழந்த சோகத்தை நான் மறக்கிறேன்" எனக் கூறுகிறார் 13 பிள்ளைகளின் தந்தையும், விவசாயியுமான அஹ்மத் ஸலீம். ஸலீமின் அனைத்து பிள்ளைகளும் ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்களாவர். 1992 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த மோதலில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது

Related

muslim country 2139742434541552104

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item