சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

முன்னாள் இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாய் ஒருவர் தான் ஃபலஸ்தீன் ஆண் கைதிகளைத் துன்புறுத்தியவிதம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. திங்கட்கிழமை (16.08.2010) ஃபேஸ் புக்கில் 'இராணுவம்- என் வாழ்வின் சிறந்த கணங்கள்' என்ற தலைப்பில் கண்களும் கைகளும் கட்டப்பட்டிருந்த ஃபலஸ்தன் கைதிகளைத் தான் நடத்திய விதத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு முன்னாள் இராணுவ பெண் சிப்பாயான ஏதேன் அபெர்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கைதிகளை நடாத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய துஷ்பிரயோகம் குறித்துக் கடுமையான கண்டனங்கள் தற்போது எழுந்துள்ள நிலையில், இஸ்ரேலிய அதிகாரத் தரப்பு இச்சம்பவம் குறித்த பெண் இராணுவ சிப்பாய் தற்போது பணியில் இல்லை என்பதால் மேற்படி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் தாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டு வழமை போலவே தன்னுடைய நழுவல் போக்கையே கையாண்டுள்ளது.

இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள ஃபலஸ்தீனக் கைதிகள் காலங்காலமாக பல்வேறு காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து அஹ்ரார் எனப்படும் ஃபலஸ்தீன் கைதிகளுக்கான நலச் சங்கம் பல்வேறு கண்டன மனுக்களை ஐ.நா. முதலான சர்வதேச அமைப்புக்களுக்கு அனுப்பியும் ஃபலஸ்தீன் கைதிகள் எதிர்கொண்டுவரும் அவல நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி புகைப்பட விவகாரம் நமக்கு உணர்த்துகின்றது.

Koothanallur Muslims

Related

Palestine 6085674310333025219

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item