'ஹிந்துத்துவ தீவிரவாதம்' என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமாம்! - பயங்கரவாத RSS

'ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.

மராத்தி மொழி பத்திரிகை ஒன்றில் வைத்யா எழுதியுள்ள கட்டுரையில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

'ஹிந்துத்துவ பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி இந்து மதத்தின் மீது கறையை ஏற்படுத்தியுள்ளனர்.இந்தக் கறையைப் போக்க இந்து மதத் தலைவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'ஹிந்து பயங்கரவாதம்' என்ற சொல்லை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சொல்லை உருவாக்கியது யார் என்று சரியாக சொல்ல முடியாது.

எனினும் இந்தச் சொல்லை உருவாக்கிய பெருமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையை சாரும் என்று ஒரு தரப்பினரும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கையே சாரும் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்து மதத்தை இழிவாகப் பேசி முஸ்லிம்களை திருப்திப்படுத்தி வாக்குகளை பெறும் நோக்கில்தான் இப்படியொரு வார்த்தையை உருவாக்கி தொடர்ந்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.

பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்பு யார் பிரசாரம் செய்து வந்தார்களோ அவர்களே தற்போது பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை நியாயப்படுத்தி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாம் மதத்துடன் மட்டும் தொடர்பில்லை, பிற மதங்களுடனும் தொடர்புண்டு என்ற ரீதியிலும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

வாக்கு வங்கியை மனதில் வைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவர்களால் இந்து மதத்தின் மீது படிந்துள்ள கறையை போக்க ஹிந்து மதத் தலைவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.

Koothanallur Muslims

Related

RSS 5514920392649749284

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item