முஸ்லிம் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை எல்லா அநீதிகளையும் தகர்த்துவிடும்- அஹ்மதி நிஜாத்

முஸ்லிம் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை எல்லா அநீதிகளையும் தகர்த்துவிடும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் நாடுகளுக்கிடையேயான கொள்கைரீதியான ஒற்றுமையும் ஐக்கியமும் நம்பிக்கைக்குரிய வெற்றியை உறுதிச் செய்வதுடன் தற்போதைய அனைத்து அநீதிகளையும் விரட்டியடிக்க இயலும் எனவும் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

அல்ஜீரிய அதிபர் அப்துல் அஸீஸ் புத்ஃப்லிகாவுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார். இந்த ரமலானை ஒற்றுமைக்காக பயன்படுத்துவோம் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஈரான் மற்றும் நஜாதின் நல்லெண்ணத்தை வரவேற்ற அல்ஜீரிய அதிபர், இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையின் மூலம் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும் என தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.

முஸ்லிம் நாடுகளுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பும்,நல்லிணக்கமும் வளர்த்தவேண்டியுள்ளது என கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபாவுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வேளையில் அஹ்மத் நஜாத் தெரிவித்தார். ஈரானுடனான உறவை மேம்படுத்துவதற்கு விரும்புவதாக கத்தர் அமீர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

Palestine 4155188470829731676

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item