கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பு: தடை ஏற்படுத்தாத மாவட்டங்களில் நடைபெறும்- பாப்புலர் ஃப்ரண்ட்
http://koothanallurmuslims.blogspot.com/2010/08/blog-post_5479.html
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பு திருவனந்தபுரம், பத்தணம்திட்டா, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடத்துவதற்கு கேரள மாநில பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தடை ஏற்படுத்திய சூழலில்தான் தடை ஏற்படுத்தாத மாவட்டங்களில் அணிவகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தலைமை வகித்தார். சட்டம் ஒழுங்கைச் சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரளாவில் 9 மாவட்டங்களில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கர்நாடகாவில் மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நேற்று முன் தினம் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்