இஸ்லாமிய உடை தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
http://koothanallurmuslims.blogspot.com/2010/08/blog-post_8257.html
இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிய உத்தரவு கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள கல்வி அமைச்சருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மலப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தொழிற்கல்லூரியில் இஸ்லாமிய முறையில் உடை அணிய அனுமதிக்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவர் கல்வி அமைச்சரிடமும் மனு கொடுத்திருந்தார்.
பொறியியல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று முஸ்லிம் இடஒதுக்கீடு கோட்டாவில் பாலக்காடில் ஒரு கல்லூரியில் சேர்க்கையும் பெற்றிருந்தார். கல்லூரி சீருடை சட்டத்தின்படி இஸ்லாமிய கலாச்சார உடையை அனுமதிக்கமுடியாது என்று கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உடனே தன்னை வேறு கல்லூரிக்கு மாற்றும்படி அந்த மாணவி கோரினார்.
சில கிறிஸ்தவ பள்ளிகள் முஸ்லிம் மாணவிகளுக்கு முக்காடு அணிய அனுமதி மறுத்ததிலிருந்து இஸ்லாமிய உடையும், முக்காடும் கேரளாவில் பரவலாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவிகள் உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளனர்.
இவ்விசயத்தில் முஸ்லிம் மாணவிகளின் தனிப்பட்ட மற்றும் சமய உரிமைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.
Koothanallur Muslims