ராஜஸ்தானில் SDPI-க்கு மீண்டும் வெற்றி

ராஜஸ்தானில் பூண்டி நகரபாலிகா தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார்.

இரண்டாவது வார்டில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நூர் முஹம்மது 195 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார். மொத்தம் பதிவான 1010 வாக்குகளில் 543 வாக்குகள் நூர் முஹம்மதுக்கு கிடைத்தது. இரண்டாவது இடத்தைப் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் கேஸரிக்கு கிடைத்தது 350 வாக்குகளாகும்.

பூண்டி,ஸவாய், மடோவ்பூர், பேகு ஆகிய இடங்களில் 10 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஓரு இடத்தில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார். 8 இடங்களில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். இதில் பல இடங்களிலும் குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்திலேயே எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 3095840209653373737

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item