ஆஃப்கனில் கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பு படையினரின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியது

காபூல்,ஆக17:2001 ஆம் ஆண்டு ஆஃப்கனை அமெரிக்க தலைமையிலான அந்நிய படைகள் ஆக்கிரமிக்கத் துவங்கியதிலிருந்து கொல்லப்பட்ட அந்நிய படையினரின் எண்ணிக்கை 2002 ஆக உயர்ந்துள்ளதாக ஐகாஷுவாலிட்டீஸ்.ஆர்க் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்களங்களில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கையை வெளியிடும் சுதந்திரமான இணையதளம் இது.

கொல்லப்பட்டவர்களில் 1226 பேர் அமெரிக்கர்களும், 331 பேர் பிரிட்டீஷ் ராணுவத்தினருமாவர். 2010 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1271 சிவிலியன்கள் ஆஃப்கனில் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை ஒப்பிட்டால் சிவிலியன்களின் மரணம் 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக கடந்த வாரம் ஐ.நா வெளியிட்ட அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. இந்த ஆண்டில் இதுவரை 434
அந்நியநாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில்தான் அதிகமான அந்நிய நாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவ்வாண்டு மரண எண்ணிக்கை 521 ஆகும். 102 பேர் கொல்லப்பட்ட 2010 ஆம் ஆண்டு ஜூன்மாதம் தான் அந்நிய ஆக்கிரமிப்பு படையினருக்கு அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய
மாதமாகும். கடந்த மாதம் 88 பேர் கொல்லப்பட்டனர்.

140000 மேலான அமெரிக்கா, நேட்டோ படையினர் ஆஃப்கனில் உள்ளனர். ஆஃப்கன் போரைக் குறித்த விவாதம் கடந்த பிப்ரவரியில் நெதர்லாந்து அரசின் வீழ்ச்சிக்கும்,கடந்த மே மாதத்தில் ஜெர்மன் அதிபரின் ராஜினாமாவுக்கும் வழி வகுத்தது.

அதேவேளையில், ஈராக்கை ஒப்பிடும் பொழுது அந்நிய நாட்டு படையினருக்கு ஆப்கானில் இழப்பு குறைவு எனலாம். 2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஈராக்கில் 4723 அந்நியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4405 பேர் அமெரிக்கர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

Taliban 3246359717383879918

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item