அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜிதை அனுமதிக்க முடியாது: பா.ஜ.க

பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்ற மிரட்டலுடன் பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பினால் அங்கீகரிக்க இயலாது என்று நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமே இது.

அயோத்திப் பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாது என்ற பழைய பல்லவியை தொடர்கின்றன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள்.

62 வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என சங்க்பரிவார்களின் அறிவிப்பு அயோத்திப் பிரச்சனையின் மூலம் தேசத்தில் மீண்டும் கலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் ரீதியாக செல்வாக்கு இழந்துள்ள பா.ஜ.க மீண்டும் பாப்ரி மஸ்ஜித் அஜண்டாவை கையிலெடுத்து கரையேற முடிவெடுத்துள்ளது.

ஒன்று அரசு சட்டமியற்றி ராமர் கோவிலைக் கட்டவேண்டும் அல்லது அனைவரின் சம்மதத்தின் மூலம் ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்க வேண்டும் என பா.ஜ.கவின் வினய் கத்தியார் கோரியுள்ளார்.

அரசுதான் தேசிய மனோநிலையை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும், கோவில் நிர்மாணம் சமாதான வழிகளின் மூலமா? அல்லது போராட்டத்தின் மூலமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்திருந்தார்.

கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியும் அறிவித்திருந்தார்.

எல்லா பா.ஜ.க, சிவசேனா எம்.பிக்கள் கையெழுத்திட்ட இதுத்தொடர்பான மனு ஒன்றை பிரதமருக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுவதற்கு அரசு சட்ட இயற்றவேண்டும் எனக்கோரி வி.ஹெச்.பி தேசமுழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காசி,மதுரா ஆகிய இடங்களிலிலுள்ள மஸ்ஜிதுகளும் ஹிந்துக்களுக்கே என வி.ஹெச்.பி கோரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே அறிக்கை விடுவது முட்டாள்தனமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் அயோத்தியில் சி.டி.கடைகளிலும், அங்காடிகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய சி.டி க்களை தடைச்செய்ய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உ.பி.மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது

Related

RSS 2947075077502509562

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item