அநீதியிழைக்கப்பட்ட அப்துல் நாஸர் மதானி

கடந்த சில வாரங்களாக தொடர்ந்த கைது நாடகத்தின் முடிவில் பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கைதுச் செய்யப்பட்டு பெங்களூருக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

கர்நாடகா அரசு நடத்திய திட்டமிட்ட சதித் திட்டத்தின் விளைவாகவே மஃதனி கைதுச் செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான தகவல்கள் நம்முன் உள்ளது.

கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் இதர எட்டு மலையாளிகளுடன் சிறையில் ஒன்பதரை ஆண்டுகள் வாடிய மஃதனி இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் அப்துல்நாஸர் மஃதனியின் ஒரு கால் நஷ்டமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மஃதனி தற்பொழுது கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பி.டி.பி தலைவரின் அரசியல் மற்றும் சமூகத்தைக் குறித்த சிந்தனைகளோடு கடும் விரோதம் கொண்ட சங்க்பரிவார் அஜண்டாதான் அன்வாருஸ்ஸேரி என்ற மஃதனியின் வசிப்பிடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைதுச் செய்யத் தொடங்கினால், இந்நாட்டில் வசிக்கும் மக்களுக்குரிய குடியுரிமைக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் என்ன மதிப்பு இருக்கிறது?

சட்டம் தனது கடமையைச் செய்யும் எனக்கூறி தப்பிக்க முனையும் கேரள காங்கிரஸ் தலைவர்கள், கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நஷ்டமடைந்த ஒன்பதரை ஆண்டுகளை திரும்ப அளிக்க இயலுமா? என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

அப்துல் நாஸர் மஃதனியின் கைது படலமும், அதற்கு முன்பு நடந்த காட்சிகளெல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்யப்படும் பொழுது காமிராக்கள் முன் தோன்றி நாற்றமடிக்கும் வார்த்தைகளை உதிர்ப்பதை வழக்கமாக்கிய அரசியல் தலைவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்களாவர். எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்.

சர்ச்சுகளுக்கு தீவைப்பதும், கிறிஸ்தவர்களை தாக்குவதையும் வழக்கமாக்கிக் கொண்டு, கலவரத்திற்கு ரேட் பேசும் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஸ்ரீராமசேனாவின் தலைவர் ப்ரமோத் முத்தலிக் போன்ற மதத் தீவிரவாதிகளின் மீதான வழக்குகளை ஒவ்வொன்றாக வாபஸ் பெறுவதும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தாக்குதல்களுக்கு பாதுகாப்பும் அளித்து வருபவர்கள்தான் கர்நாடக மாநில பா.ஜ.க ஆட்சியாளர்கள்.

இந்நாட்டின் சாதாரண மக்களுக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையிலேயே பா.ஜ.கவின் இந்த தகிடுத்தத்தங்கள் உதவும்.

போதிய சட்ட நடைமுறைகள் மேற்க்கொள்ளப்படாத காரணங்களால் மஃதனியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்து உச்சநீதிமன்றம் கூறிய விமர்சனங்கள், மஃதனிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க வழிவகுக்கும் என நாம் நம்புவோம். ஜாமீன் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்றும், ஏற்கனவே தள்ளுபடிச் செய்யப்பட்ட பொழுது சுட்டிக்காட்டிய விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டாமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனிதமிக்க ரமலான் மாதத்திலேயே அப்துல் நாஸர் மஃதனி ஜாமீனில் வெளிவரவும், தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் வல்ல இறைவன் உதவிபுரிவானாக! என நாம் பிரார்த்திப்போம்.

விமர்சகன்

Related

RSS 8099954603455421702

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item