காழ்ப்புணர்வின் உச்சகட்டம்

எகிப்து வம்சாவழியைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும், இமாமுமான ஃபைஸல் அப்துற்றவூஃப் மிதவாதியான அமெரிக்க குடிமகனாவார்.

கடந்த பிப்ரவரி மாதம் மார்க்க உரைநிகழ்த்துவதற்காக எகிப்திற்கு வருகை புரிந்திருந்தார். அப்பொழுது அவர், அமெரிக்காவும் முஸ்லிம் உலகத்திற்குமிடையில் சகோதரத்துவத்தையும்,பரஸ்பர நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதுக் குறித்துத்தான் பேசினார்.

சமரசமும், சமாதானமும்தான் அப்துற்றவூஃபின் உரையாடல்களின் சாரம்சமாகும். ஆனால் அமெரிக்க வலதுசாரி ஊடகங்களில் இன்று அப்துற்றவூஃப் பசுத்தோல் போர்த்திய புலியாக வர்ணிக்கப்படுகிறார்.குடியரசுக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் துணை அதிபர் வேட்பாளர் ஸாரா பெய்லினும் அவரைச் சார்ந்தவர்களும் அப்துற்றவூஃபின் பொதுநிலைப்பாடுகள் உள்ளத்திலிருக்கும் பயங்கரவாதியை மூடிமறைப்பதற்கான தந்திரம் எனக் கூறுகின்றனர்.

உண்மை என்னவெனில்,கடந்த 1960களில் கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாத்திற்குமிடையான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுச்செய்து,இரண்டு மதங்களுக்கிடையேயான பொதுவான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு சூஃபி பெரியாரின் மகன் தான் அப்துற்றவூஃப்.

அப்துற்றவூஃப் போன்ற ஒரு மிதவாதி அமெரிக்க வலதுசாரிகளின் நெஞ்சங்களில் நெருடலை ஏற்படுத்துவதற்கு காரணம் தகர்ந்து வீழ்ந்த உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கடந்த சில காலமாக கொர்தோவா ஹவுஸ் என்ற பெயரில் கலாச்சாரமையம் ஒன்றை நிர்மாணித்து வருவதுதான்.

அப்துற்றவூஃபை சாத்தானாக சித்தரிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

muslim country 2962679122078591335

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item