லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது - கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்

Related

lebanon 8106809431564887371

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item