ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கலாம்!

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால் இஸ்ரேல் நேரடியாக களமிறங்கி ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஓராண்டுக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து அட்லாண்டிக் மேகசீன் இதழில் பாதுகாப்பு வல்லுனரான ஜெப்ரி கோல்ட்பெர்க் எழுதியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அனுமதியைக் கூட பெறாமல் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தலாம்.

நூற்றுக்கணக்கான எப்-15இ, எப்-15எஸ், எப்-16சி ரக போர் விமானங்களை இஸ்ரேல் இதற்குப் பயன்படுத்தலாம்.

ஈரானுக்கு விமானங்களை தாக்க அனுப்பிவிட்டு அது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அந் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசி அராட் ஆகியோர் தகவல் தருவார்கள்.

அதற்கு முன் இரண்டு, மூன்று முறை தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்காவுக்கு தவறான சமிஞைகளை இஸ்ரேல் தரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தால் இரு நாடுகளின் உறவு சீர்குலையும். அதேபோல ஈரானை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாகத் தாக்கினால் வளைகுடாவில் முழு அளவில் போர் வெடிக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

போர் மூளும்-காஸ்ட்ரோவும் சொல்கிறார்:

அதே போல முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் மூள நிறைய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது நாட்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலின் மிரட்டல்களுக்கு ஈரான் நிச்சயம் அடி பணியாது. அதே நேரத்தில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் சக்தி அமெரிக்காவிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையிடேமா இல்லை.

இதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம். பதிலுக்கு ஈரானும் கடும் தாக்குதல் நடத்தலாம். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதி தரும் அமெரிக்கா, அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று சொல்ல என்ன அதிகாரம் உள்ளது?.

அதே போல தான் மட்டும் அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேல், அதை ஈரான் வைத்திருக்கக் கூடாது என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டுள்ளார்.

Source : Thatstamil.com
Koothanallur Muslims

Related

muslim country 855046242284867599

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item