ஈரான் அதிபரை கொலை செய்ய முயற்சி- கார் மீது குண்டு வீச்சு

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததையடுத்து அதிபரின் வாகனமும் பிற வாகனங்களும் அங்கிருந்து வேகமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இநத சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் அவர் நேரடியாக உரையாற்றினார். ஆனால், இந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் ஏதும் பேசவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன் இன்று காலை சிரிய நாட்டு அதிபர் பஸர் ஆசாத்துடன் அவர் தொலைபேசியில் பேசினார்.
அப்போது லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவியதை அவர் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் லெனானில் இஸ்ரேலை எதிர்ததுப் போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.
தன்னைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சில காலமாகவே அகமதிநிஜாத் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.