போலி என்கவுண்டர் குற்றவாளி அமீத் ஷாவின் சிறைக்காவல் நீட்டிப்பு

சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் குற்றவாளி அமீத் ஷாவின் சிபிஐ காவல் விசாரணை முடிந்ததையடுத்து அவருடைய சிறைக் காவல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தது சிபிஐ. சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை ஷாவை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தவே வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஷாவை ஆகஸ்ட் 21ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக நடந்த விசாரணையின்போது இரு மூத்த சிபிஐ அதிகாரிகளான கந்தசாமியும், அமிதாப் தாக்கூரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து சபர்மதி சிறையில் அமீத் ஷா மீண்டும் அடைக்கப்பட்டார்.

Koothanallur Muslims

Related

Modi 9216846217503967698

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item