கேரளாவில் போலீஸ் தலைமையகம் சித்திரவதைக் கூடங்களாக செயல்படுவதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியீடு

http://koothanallurmuslims.blogspot.com/2010/08/blog-post_6538.html

காவல்துறையினர் ஆழுவா, மூவாட்டுப் புழா மற்றும் பெரம்பாவூர் ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் தலைமையகங்களை மக்களை சித்திரவதை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர் என தேஜஸ் மலையாள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போலீஸ் கொடூரமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் மேலும் சட்டத்திற்கு புறம்பாகவும் சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகளிடம் இருந்து தகவல்களை வெளிக் கொண்டுவரவும், அப்பாவி மக்களிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கும் கொடூரமான சித்திரவதை முறைகளை கையாளுகின்றனர்.
இம்மாதிரியான சித்திரவதை கூடங்கள் கஷ்மீர் தொடர்பான வழக்குகள், சிமி சம்பந்தமான வழக்குகள் மற்றும் கலமச்சேரி பஸ் எரிப்பு வழக்குகள் போன்ற மேலும் பல வழக்குகளில் இந்த சித்திரவதைக் கூடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இம்மாதிரியான சட்டத்திற்கு புறம்பான வழிகளை மூவாட்டுப் புழாவில் கல்லூரி பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கிலும் பயன்படுத்தியுள்ளனர்.
இது காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களின் அமைதியான ஒப்புதல்களோடு பல நாடுகளில் உள்ள அமெரிக்காவின் CIA வின் ரகசிய சித்திரைவதைக் கூடங்களைப் போன்ற மாதிரி வடிவில் செயல்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

தீவிரவாதம் என்ற பெயரில் கைது செய்பவர்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதற்கு காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே.
இத்தகைய கடும் சித்திரவதைகளுக்கு உள்ளான நபர்கள் சிலர் ரகசியமாக செய்யப்படும் இத்தகைய சித்திரவதைக் கூடங்களைப் பற்றி நீதிமன்றங்களில் எடுத்துக் கூறியும். எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தங்களின் பிரியமான குடும்பத்தினர் காணமல் போய் சில நாட்கள் கழித்து சம்பத்தப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடும் பொழுது மட்டுமே காவல்துறை அவர்களை கைது செய்ததை வெளியில் கூறுகின்றது. என்றும் அந்த செய்தி கூறுகின்றது.
Koothanallur Muslims