இஸ்ரேலின் மிரட்டலை புறக்கணித்தது லெபனான்

இஸ்ரேலின் அராஜகத் தடைகளால் அவதியுற்றுவரும் காஸ்ஸா மக்களுக்கு உதவி புரிவதற்காக வடக்கு லெபனான் துறைமுகத்திலிருந்து இன்று புறப்படும் மரியம் என்ற பெயரிலான நிவாரணக் கப்பலை தடுப்போம் என இஸ்ரேலிய அமைச்சர் யஹூத் பாரக்கின் மிரட்டலை லெபனான் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

நிவாரணக்கப்பலை எகிப்திய துறைமுகத்திலோ அல்லது இஸ்ரேலிலோ அனுமதிக்கலாம் என பாரக் தெரிவிக்கிறார். லெபனானுடன் மோதல் போக்கை இஸ்ரேல் கையாண்டுவருவதால் நிவாரணக்கப்பல் காஸ்ஸாவிற்குள் பிரவேசிக்க முடியாது. அதற்கு பதிலாக சைப்ரஸ் வழி செல்லவேண்டிவரும். அதேவேளையில் நிவாரணக் கப்பலை தடுக்கப் போவதாக சைப்ரஸ் அறிவித்துள்ளது.

பொலிவியன் கொடியைக் கொண்ட சரக்குக்கப்பலில் 60 லெபனான், ஐரோப்பா, அமெரிக்காவைச் சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் உள்ளனர். புற்றுநோய் மருந்துகளை ஏற்றி வருகிறது இக்கப்பல்.

துருக்கியின் நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய அக்கிரம தாக்குதலில் ஒன்பது துருக்கி சேவைத் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது துருக்கி இஸ்ரேலுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

muslim country 7004955631512145183

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item