மத்திய கிழக்கில் இரு நாடுகள் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை ஆரம்பிக்கும்- அஹமதி நிஜாத்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் மத்திய கிழக்கிலுள்ள இரு நாடுகள் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை ஆரம்பிக்குமெனத் தாம் எதிர்பார்ப்பதாக ஈரானிய ஜனாதிபதி அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அஹமதி நிஜாத் இவ்விரு நாடுகளுக்குள் ஈரானும் உள்ளடங்குகிறதா என்பது குறித்து பதில் ஏதும் குறிப்பிடாத அதேவேளை தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களில் எது இவ்வாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதையும் கூறவில்லை.

இதேவேளை ஈரானின் அணு நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரிக்கவில்லை.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இப் பிராந்தியத்திலுள்ள குறைந்தது இரு நாடுகள் மீது அவர்கள் தாக்குதலை நடத்தத் தீர்மானித்திருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ள அஹமதி நிஜாத் இதற்கான சதியை அமெரிக்கர்கள் மேற்கொள்வதற்கான தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஈரானுக்கெதிரான தடைகளை விமர்சித்துள்ள அஹமதி நிஜாத் தடைகளின் ஊடாக பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான அவர்களது தந்திரம் தோல்வியையே ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

Related

muslim country 3045426413320865861

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item