அமெரிக்க படைகளுக்காக சவக்குழிகளை தயார் செய்யும் ஈரான்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்கும் நிலை வந்தால் அமெரிக்க வீரர்களை புதைப்பதற்காக பெரும் அளவில் சவக்குழிகளை தயார் செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து தங்களுடைய உறுதியான நிலைபாட்டை அமெரிக்காவுக்கு காட்டுவதாக ஈரானின் இந்த அறிவிப்பு இருந்தது.

1980-1988 ஈரான், ஈராக் போரில் கொல்லப்பட்ட ஈராக் வீரர்கள் புதைக்கபட்ட ஈரானின் தென்மேற்கு மாகாணமான குஸெஸ்டானில் இந்த சவக்குழிகள் வெட்டப்படுவதாக ஈரான் புரட்சிப் படை தலைவர் ஜெனரல் உஸைன் கனானி மொகாடம் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அவர் தெரிவித்தார். அமரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை தலைமையகம் ஈரானுக்கு மிக அருகில் பஹ்ரைனில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொகாடம் மேலும் தெரிவிக்கையில்; 'எதிரிகள் அவர்களின் சொந்த ராணுவ தளங்களில் போரை சந்திப்பார்கள் அவர்கள் ஈரானில் நுழைவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது' என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அமரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஈரானுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

செய்தி:Gulf News
Koothanallur Muslims

Related

muslim country 6103264133051629984

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item