ஹிந்துத்துவா சக்திகளை பகிரங்கப்படுத்துவது ஹிந்து விரோதமல்ல: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்தியா முழுவதும் 'SAVE INDIA DAY' என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கினைக் குறித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஹிந்து விரோதம் என்று போலீஸ் கூறுவது சரியல்ல என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தின் சில பகுதிகளிலும், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புனேயிலும் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

" 'இந்தியாவை பாதுகாப்போம்' என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியதால் எவ்விடத்திலும் மதரீதியான மோதல் நடைபெற்று சட்டம்-ஒழுங்கு சீர்குலையவில்லை. ஆனால் 153 -வது பிரிவின் படி வழக்குத் தொடர்ந்தது போலீசாரிடம் ஹிந்த்துத்துவா வாதிகள் எவ்வளவுதூரம் தவறாக புரிந்துக்கொள்ள வைத்துள்ளார்கள் என்பதையும், ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

மதத்துவேசம் வளர்ப்பதாக போலீசார் கூறும் சுவரொட்டி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை உலுக்கிய குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ள ஹிந்துத்துவா சக்திகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகும். இச்செய்தியை சில பிரபல பத்திரிகைகள் வெளியிடும்பொழுது 'ஹிந்துத் தீவிரவாதம்' என்றே வெளியிடுகின்றன. ஆனால் சுவரொட்டியில் 'ஹிந்துத்துவா தீவிரவாதம்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. காரணம் 'ஹிந்து' என்ற வார்த்தை ஹிந்து மதத்தைப் பின்பற்றும் பெரும்பான்மை ஹிந்துக்களை குறிப்பிடுவதாகும். ஆனால் 'ஹிந்துத்துவா' என்பது ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் சகோதர அமைப்புகளும் பிரச்சாரம் செய்துவரும் 'ஹிந்துராஷ்ட்ரம்' என்ற தத்துவத்தை சுட்டிக்காட்டுவதாகும்.

சங்க்பரிவாரத்தின் மதவெறி அரசியலைக் குறித்து குறிப்பிடும் பொழுது மதசார்பற்ற அமைப்புகளெல்லாம் 'ஹிந்துத்துவா' என்ற பதத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், தானே, கான்பூர், நந்தத், மலேகான்-ஒன்று,இரண்டு, ஹூப்ளி, கோவா என கடந்த நான்கு வருடங்களில் நடந்த 10 குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்குதான் சுவரொட்டியின் உள்ளடக்கம் ஆகும்.

இந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கினை சி.பி.ஐ கண்டறிந்து அது தேசிய ஊடகங்களில் விவாதத்தை உருவாக்கிய சூழலில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இப்பிரச்சாரத்தை நடத்தியது. இதன்பெயரில் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ராவிலும் வழக்கு பதிவுச் செய்துள்ளதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சங்க்பரிவாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவது ஹிந்துக்களை கோபத்திற்கிடையாக்கி, மதுத்துவேசத்தை உருவாக்க காரணமாகுமா? என்பதை தெளிவுப்படுத்த இக்கட்சிகளின் தேசிய தலைமை தயாராக வேண்டும்." இவ்வாறு கெ.எம்.ஷெரீஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Koothanallur Muslims
பாலைவனதூது

Related

RSS 1558848825517196630

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item