கேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் பதிலடியாக மாறிய SDPI-ன் முன்னேற்றம்

முவாற்றுப்புழா என்ற இடத்தில் நபி(ஸல்...) அவர்களை கேவலமாக விமர்சித்து வினாத்தாள் தயாரித்த நியூமென் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கைவெட்டிய வழக்குத் தொடர்புப்படுத்தி ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் மற்றும் சங்க்பரிவார்களும் நடத்திய பொய்ப் பிரச்சாரம், போலீஸ் நடத்திய முஸ்லிம் வேட்டை ஆகியவற்றிற்கு எதிராக கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர் கேரள வாக்காளர்கள்.

மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நபிகளாரை அவமதித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்தி அதிகமான முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடி, சிறையிலடைத்த எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்ற வார்டுகளில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் கைவெட்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அனஸ் வாழைக்குளம் ப்ளாக்கில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்கவோ, வாக்களிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 3992 வாக்குகளைப் பெற்று 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப் பெற்றார். அனஸ் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்த பல பஞ்சாயத்து வார்டுகளிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நபிகளாரை அவமதித்த வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர் ஜோசப் பணியாற்றிய நியூமென் கல்லூரி அமைந்துள்ள கீரிக்கோடு வார்டில் 310 வாக்குகளைப் பெற்று எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் ஆசிரியை சுபைதா வெற்றிப் பெற்றார். இவ்வார்டிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ யினால் ஈர்க்கப்படுவதை கவலையோடு காண்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை. பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் எஸ்.டி.பி.ஐயை ஒடுக்கிவிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது.

பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்களை விட எஸ்.டி.பி.ஐயின் அலுவலகங்கள் அதிகமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் பி.கோபிநாத்தின் திருப்புணித்துரா என்ற இடத்திலிலுள்ள வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர். கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி.பி.மைதீன் குஞ்சினை இவ்வழக்கில் குற்றவாளியாக இணைத்ததும் கட்சியின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கத்திலாகும்.

பகிரங்கமாகவே எர்ணாகுளம் நகரின் மத்தியில் பாலாரிவட்டம் போலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வியாபாரபவன் என்ற ஆடிட்டோரியத்தில் எஸ்.டி.பி.ஐ நடத்திய மத்திய மண்டல தலைவர்களின் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த போலீசார் நிகழ்ச்சியை அலங்கோலப்படுத்த முயன்றனர்.

எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பல இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் கூட வாக்குகளை அளிக்கச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகிய எதிர்மறையான கட்சிகள் ஒன்றினைந்த விசித்திர சம்பவங்களும் பல வார்டுகளில் அரங்கேறியது.

பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட முவாற்றுப்புழாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஜனகீய முன்னணி என்ற கட்சியின் முக்கிய பிரச்சார ஆயுதமே பேராசிரியரின் கைவெட்டு சம்பவமாகும்.

Related

SDPI 4407678158499664114

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item