பாபரி மஸ்ஜித் தீர்ப்பைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

இது இந்திய தேசத்திற்கே மிகப் பெரிய அவமானமாகவும், தலைக் குனிவாகவும் உலக அரங்கில் இருந்து வருகின்றது.
பாபரி பள்ளிவாசல் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் சரியாகவும், முறையாகவும், நீதியாகவும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபோது நெஞ்சில் இடியாக வந்தது அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.
இந்த அநீதியை ஜனநாயக ரீதியாக கண்டிக்கும் வண்ணமாக அலஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக் கூடிய சூழல் தற்போது இல்லாததால், சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என குடும்பத்துடன் பெருந்திரளாக சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி...
நீதி வேண்டும்! நீதி வேண்டும்! பாபரி பள்ளிவாசல் வழக்கில் நீதி வேண்டும்!
காந்தி வாழ்ந்த தேசமடா! அம்பேத்கர் தந்த சட்டமடா!
மாறிப் போச்சு மாறிப் போச்சு! கட்டப் பஞ்சாயத்தாய் மாறிப் போச்சு!
உடையவனுக்கு ஒரு பங்கு! உடைத்தவனுக்கு 2 பங்கா!
இது நீதியா!! அநீதியா??
ஆபத்து! இது ஆபத்து! நீதித்துறைக்கே ஆபத்து!!
இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் பாபரி பள்ளியை கட்டுவோம்!
இந்தியாவை வல்லரசாக உருவாக்குவோம்!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், துணை பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர்களான அப்துல் ஹமீது, அபு ஃபைஸல், இனாயத்துல்லா, முஹம்மது ஷிப்லி, செங்கிஸ்கான், வேளாச்சேரி சிராஜ், அபூ ஆசியா மற்றும் கோவை ஜஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை மாவட்ட நிர்வாகிகள் யூனுஸ், காஜா கரீமுல்லாஹ், யூஸுஃப்கான், ஹனிஃபா, தாம்பரம் ரஹ்மத்துல்லாஹ், ஹனீஃப், ஹஸன் அலி, ஆவடி ஃபாரூக், ஷான் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.
Source : INTJONLINE
Koothanallur Muslims