அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது AIMPLB

All India Muslim Personel Law Board Meet
செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாருல்உலூம் நத்வதுல் உலமா தீர்மானித்துள்ளது . அக்டோபர் 16,2010 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று தாருல் உலூம் நத்வாவில் நடைப்பெற்ற 51 உறுப்பினர்களைக் கொண்ட வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

பாப்ரி மஸ்ஜித் மூன்று கட்சிதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் கடந்த செப்.30 ஆம் தேதி வெளியிடப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பக்குவமின்மைகள் காணக்கிடக்கின்றன என செயற்குழு மதிப்பீடுச் செய்ததாக வாரியத்தின் தீர்மானத்தை அறிவிப்பதற்காக அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் மவ்லவி அப்துற்றஹீம் குரைஷி தெரிவித்தார்.

சட்டத்தின் இடத்தில் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள தீர்ப்பு இது. தேசத்தின் நீதிக்கட்டமைப்பு சவால் விடும் இந்த தீர்ப்பை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளவியலாது. இந்தியாவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று கூறுகிறது இந்த தீர்ப்பின் உள்ளடக்கம்.

உயர்நீதிமன்றத்தின் குறைபாடுகளை திருத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவது முஸ்லிம்களின் கடமையும், உரிமையுமாகும். தற்பொழுது இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பில் மேல்முறையீடுச் செய்வது சன்னி வக்ஃப் போர்டு ஆகும். அதற்கு தேவையான எல்லா உதவிகளையும், ஆதரவையும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் அளிக்கும் எனவும் குரைஷி தெரிவித்தார்.

ஆனால், முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கட்சிதாரராக இணையவேண்டிய சூழல் உருவானால், அதுக் குறித்து முடிவுச்செய்ய வாரியத்தின் தலைவரையும், பொதுச் செயலாளரையும் செயற்குழு பொறுப்பை ஒப்படைத்துள்ளது என வாரியத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பிரிவை கலந்தாலோசித்தப் பிறகு இதுக்குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். 60 வருடத்திற்கு மேலான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பரிகாரம் காண்பதில் வாரியத்திற்கு எதிர்ப்பில்லை என தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு முன்முயற்சியை வாரியம் எடுக்காது. எவரேனும், அத்தகையதொரு ஃபார்முலாவுடன் வந்தால் பரிசீலிப்போம். ஆனால், அது இந்திய அரசியல் சட்டம், ஷரீஅத் சட்டங்கள், முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் விதமாக இருக்கவேண்டும் என குரைஷி தெரிவிக்கிறார்.

உயர்நீதிமன்றத்திலிருந்து கையெழுத்திடப்பட்ட தீர்ப்பு நகல் கிடைத்து 30 தினங்களுக்குள் அப்பீல் செய்யவேண்டுமென்பது சட்டம். ஆனால், தீர்ப்பின் நகல் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அப்பீல் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் துவக்கியதாகவும் குரைஷி தெரிவிக்கிறார்.

இவ்வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான ஹாஷிம் அன்சாரி நடத்தும் பேச்சுவார்த்தைகள் தனிப்பட்ட ரீதியானதாகும் என வாரியம் கருத்துத் தெரிவித்துள்ளது. பாப்ரி மஸ்ஜிதின் உரிமையை நிராகரிக்க முடியாது என ஏற்கனவே சன்னி வக்ஃப் போர்டு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டத்திற்கு தலைவர் மவ்லானா ராபிஃ ஹஸன் நத்வி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செய்யத் நிஜாமுதீன், பாப்ரி மஸ்ஜித் ஆக்‌ஷன் கமிட்டி கன்வீனர் எஸ்.காஸிம் ரசூல் இல்லியாஸ், சட்டப்பிரிவு கன்வீனர் ஒய்.ஹெச்.முச்சாலா, பாப்ரி மஸ்ஜித் வழக்கில் வழக்கறிஞரான ஸஃபர்யாப் ஜீலானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், முஜாஹித் தலைவர் ஹுசைன் மடவூர், அப்துஸ்ஸுக்கூர் காஸிமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Source : Popular Front Of India

Related

pfi 8407804222539659762

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item