பாப்ரி மஸ்ஜிதை மீட்பதற்கான முயற்சிகள் தொடரும் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மீட்பதற்கான ஜனநாயகரீதியான, சட்டரீதியான முயற்சிகளை இந்தியாவில் முஸ்லிம்கள் தொடரவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பின் முழுவிபரமும் இதுவரை கிடைக்கவில்லை. வழக்கின் முக்கிய விஷயங்களில் நீதிபதிகளுக்கிடையே கருத்துவேறுபாடுள்ளது தெளிவாகியுள்ளது.

மஸ்ஜிதின் மையப்பகுதியில் கோபுரத்திற்கு கீழே தற்பொழுது ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம் ஹிந்துக்களுக்கு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்களுக்கு பதிலாக மத நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என தோன்றுகிறது.

அதுமட்டுமல்ல,கட்சிதாரர்கள் நிலத்தை பங்கிடவேண்டும் என கோரவுமில்லை. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்டுபிடிப்புகளுக்கு தீர்ப்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

எதிர்கால வழக்குகளிலும் இம்முறை தொடருமானால், தேசத்தின் பெரும்பாலான வழிப்பாட்டுத்தலங்கள், தொல்பொருள் ஆய்வு மையங்களின் நிலை அபாயகரமாக இருக்கும். உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதி தீர்மானம் அல்ல எனவும், உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் இவ்வழக்கின் அனைத்து கட்சிதாரர்களும், அரசியல் கட்சிகளும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்யப்போவதாக உ.பியில் சுன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு வழக்கறிஞர் இதனை உறுதிச் செய்திருந்தார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலம் மீண்டும் கிடைக்கும்வரை அதற்கான ஜனநாயக, சட்டரீதியான போராட்டம் இந்தியாவில் முஸ்லிம்கள் இனிமேலும் தொடரவேண்டும். அதேவேளையில் தேசத்தில் எல்லா பிரிவு மக்களும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணவேண்டும். பரஸ்பர உறவை மேம்படுத்த அனைவரும் முயலவேண்டும். இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 6844447059887729258

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item