குஜராத் இனக் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார் -முன்னாள் உள்துறை அமைச்சர் வாக்குமூலம்

2002-ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.
 

Related

Modi 8578933798558806779

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item