அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது -NCHRO

டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் செய்ய முயல்வது அரசியல் சட்டம் அனுமதித்த அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் என NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய கமிட்டி தெரிவித்துள்ளது.

தனது கருத்தை வெளியிட்டதற்காக ஜனநாயக அரசு ராணுவ அரசு மேற்கொள்வதற்கு சமமான மனித உரிமை மீறலை நடத்துகிறது. சர்வதேச அளவில் பிரபலமான இலக்கியவாதியும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை கைதுச் செய்ய நடத்தப்படும் முயற்சி
எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அருந்ததிராயை பொய் வழக்கில் கைதுச்செய்து சிறைக்கொட்டடியில் அடைக்க முயற்சிக்கும் மத்திய அரசின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது என NCHRO தலைவர் நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ரெனி ஐலின் ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

KOOTHANALLUR

Related

SDPI 7577912743659910403

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item